ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் பானுப்பிரியா ( வயது 27) இவர் பிரசவத்துக்காக கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார் மருத்துவ பரிசோதனை நடந்தது .இதனால் தனது நகைகளை கழட்டி அங்கிருந்த ஒரு நர்ஸ் மூலம் அவரது கைப்பையில் வைத்து அதனை அலமாரியில் வைத்து விட்டு பரிசோதனைக்கு சென்றுள்ளார் திரும்பி வந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த பையில் இருந்த 2 பவுன் செயினுடன் . கூடிய வைர டாலரை காணவில்லை. இதுகுறித்து காட்டூர் குற்ற பிரிவு போலீசில் பானுப்பிரியா வின் தந்தை ரவிச் சந்திரன் புகார் செய்தார் .புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மருத்துவமனையில் பணியாற்றும் 2 நர்சுகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.