ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் குழந்தைகள் திருமணம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், குழந்தைகள் திருமணத்தை தடை செய்யும் குழுவை சேர்ந்த திரு.தீபக், ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி திரு.மல்லிகா, ரீடு தொண்டு நிறுவனப் பணியாளர் கவிதா ஆகியோர் கெம்பநாயக்கன்பாளையம் சென்றனர்.
அப்போது அங்கு 18 வயதுக்கு கீழ் உள்ள இரண்டு சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடப்பதை கண்டறிந்தனர். அவர்களிடம் குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம் எனவும்,
அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறி திருமணங்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் குழந்தை திருமணம் செய்து வைப்போர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.