சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் 3வது காந்திரோடு தெருவில் வசிக்கும் கூலித்தொழிலாளியின் 5 வயது மகள் இரவு சுமார் 9 மணியளவில் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்துள்ளார்,
அப்போது சிறுமி குடியிருக்கும் வீட்டிற்கு மேலே புதியதாக வாடகைக்கு குடி. வந்த சேலத்தை சேர்ந்த தேவி என்பவரின் மகன் ஜிக்னேஷ் 15 வயது சிறுவன் அந்த சிறுமியிடம் நைசாக பேசி வீட்டில் ஆள் இல்லாத போது சிறுவனின் வீட்டிற்கே சிறுமியை அழைத்து சென்று ஆடைகளை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது,
சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி சென்று 5 வயது சிறுமியை மீட்ட அப்பகுதி மக்கள் 15 வயது சிறுவனை பிடித்து சராமாரி தாக்கி ஆத்தூர் நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர்,
பொதுமக்களிடம் இருந்து சிறுவனை மீட்ட நகர போலீசார் சிறுவனை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
5 வயது சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவனுக்கு பொதுமக்கள் நல்ல கவனிப்பு கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,