தேனி: தேனி மாவட்டம் போடி டி.வி.கே.கே. நகர் செல்லகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜா 36. இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது கடை மற்றும் வீட்டில் சோதனை செய்தபோது. 1,320 பாக்கெட் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி கிருஷ்ணராஜாவை கைது செய்தனர்.