சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் நல்லாங்குடி சமத்துவபுரத்தில் 100 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு முதல் கட்டமாக 61 பேருக்கும் இரவுசேரி பகுதியில் வசித்து வந்த காட்டுநாயக்கர் 45 பேருக்கும் மற்றும் நீர் நிலையில் வசித்து வந்த 4 நான்கு பேரக்கும் மொத்தம் 110 இலவச பட்டாவை காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி தேவகோட்டை ஒன்றிய சேர்மன் பிர்லாகணேசன் ஆகியோர் வழங்கினர் .இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் செல்வராணி, துணை வட்டாட்சியர் அமுதா, வருவாய் ஆய்வாளர் மாலதி விஏஓ சந்திரசேகர், சின்னராஜா,கிராம நிர்வாக உதவியாளர்கள், தளக்காவயல் ஊராட்சி மன்ற தலைவர் வன்னிநாதன், துணைத் தலைவர் ஐயப்பன்,திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம், வழக்கறிஞர் சஞ்சய். கவுன்சிலர்கள், அனைத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி