இராமநாதபுரம் : இராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் (21.04.2023) மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று பள்ளி
மாணவ, மாணவிகளுடன் 1000 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கருத்துரை வழங்கினார்.
மேலும் இம்மாணவ, மாணவிகளை போல் மற்ற பள்ளிகளிலும்மரக்கன்றுகள் நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் திரு. கணேச கண்ணன் அவர்கள், பள்ளிச் செயலாளர் திருமதி.ஜீவலதா
அவர்கள், பள்ளி முதல்வர் திரு.முத்துக்குமார் அவர்கள் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி