ஸ்ரீபெரும்புத்தூர்:ஸ்ரீபெரும்புத்தூர் அருகே இரவு நேரத்தில் விபத்தில் சிக்கியவரை மீட்ட இன்ஸபெக்டர்வேலூர். ஏப்.17: வேலூர் நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் லக்குவன் இவர் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றவிட்டு பின்னர் மீண்டும் நேற்று இரவு வேலூர் திரும்பி கொண்டிருந்தார் அப்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவர்சத்திரம் பாப்பான்குழி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற கார் ஒன்று அவ்வழியாக பைக்கில் சென்றவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது விபத்தில் சிக்கிய வலிபர் ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் அசைவின்றி கிடந்தார் உடனே இன்ஸ்பெக்டர் லக்குவன் தான் வந்த காரை நிறுத்தி சாலையோரம் படுகாயத்துடன் கிடந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பியுள்ளார் உயிர் இருப்பதை அறிந்து உடனே அவ்வழியாக எதிர் திசையில் சென்ற ஹைவே பேட்ரோல் போலீசாரை உதவிக்கு அழைத்துள்ளார் அதில் இருந்து எஸ்.ஜ சங்கர் தலைமையிலான குழுவினருடன் சேர்ந்து இன்ஸ்பெக்டர் லக்குவன் ஆம்புலன்ஸ் வரவழைத்து விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அணுப்பி வைத்தனர் இரவு நேரத்தில் சாலையில் விபத்தில் சிக்கியவரை மீட்ட இன்ஸ்பெக்டரை அவ்வழியாக வந்த பொதுமக்களும். ஹைவே போலீசாரும் பாரட்டினர்.