கரூர்: தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால், தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை
தமிழக அரசு அறிவித்தது. இதில் பால், மருந்தகம் உள்ளிட்ட கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் மற்று அனைத்து கடைகளும் மூட உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அனைத்துக்கும் மூடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டமின்றி ஒஎறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் கிராம புறங்களில் இருந்து அரூர் நகருக்குள் நுழைய முடியாத அளவிற்கு பிரதான
சாலைகள் முழுவதும் தடுப்பு வேலிகள் அமைத்து காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் திவீர வாகன சோதனை செய்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதித்து வருகின்றனர்.
இதனால் கிராம புறங்களில் இருந்து வருபவர்கள் அரூர் நகருக்குள் நுழையாமல் திரும்பி செல்கின்றனர்.