திருவண்ணாமலை : வெளிமாநில மதுபானங்கள் குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் திருவண்ணாமலை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த அரசு பஸ்சை சோதனை செய்தனர். இதில் கர்நாடகா மாநில மதுபான பாட்டில்களை கள்ளக்குறிச்சியை சேர்ந்த மல்லிகா (36) என்பவர் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்