நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் வேதாரண்யம், வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள், மற்றும் போலீசார் வேதாரண்யம் அருகே பெரியகுத்தகை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகுத்தகை மாரியம்மன்கோவில் பகுதியில் மறைந்திருந்த முகமதுயூசுப் (40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4 ஆயிரத்தையும் கைப்பற்றினர்.