பெரம்பலூர்: பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூரை சேர்ந்த ஜெய்சங்கரை 52 போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் ரூ.2 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.