திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் தொடர் தீவிர முயற்சியால் டெல்லி மற்றும் ஹரியானா பகுதிகளில் முகாமிட்டிருந்த காவல் ஆய்வாளர் திரு.புகழ் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் (03.05.2023) தேதி இக்குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டு நேரடியாக கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான (A1) ஆசீப் ஜாவேத், நூ மேவாத் மாவட்டம், ஹரியானா மாநிலம் என்பவரை ஹரியானா – ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் தவுரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரவல்லி மலைப்பகுதியில் பல சவால்களுக்கிடையே துணிகரமாக செயல்பட்டு துப்பாக்கி முனையில் கைது செய்து அவரிடமிருந்து ரூ.15 இலட்சம் பறிமுதல்.