மதுரை : மதுரை கோயம்புத்தூர் சூலூர் தாலுகா அரசூரை சேர்ந்தவர் நல்லையா மகன் ராமசாமி (43) இவரிடம் வில்லாபுரம் வேலுப்பிள்ளை தெருவை சேர்ந்த குணாளன் மகன் ராஜா என்பவர் நண்பராக அறிமுகமானார். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ராமசாமியிடம் கூறியுள்ளார். இதற்காக ஒருவருடத்திற்கு முன்பு ரூபாய் 4,95,000 பெற்றுள்ளார். இந்த பணத்தை வில்லாபுரத்தில் ராஜா வீட்டில் வைத்து கொடுத்துள்ளார். அவர் பணம் பெறும் போது வெங்கடேசன் என்பவரும் உடன் இருந்துள்ளார். பின்னர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து கேட்டபோது வாங்கிய பணத்தில் ரூ 2லட்சத்து ஐம்பதாயிரத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். மீதமுள்ள ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவந்துள்ளார். இது குறித்து ராமசாமி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராஜா மற்றும் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி