தென்காசி : சங்கரன்கோவில் சாலையில் மாரிராஜ் என்பவரது வீடுஇன்று காலை இவர் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது.இருப்பினும் அதில் நகை மற்றும் பணம் ஏதும் இல்லாததால் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளார்.
இதுகுறித்து மாரிராஜ் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.