கோவை: கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள விநாயகபுரம் |இளங்கோ நகரில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. இன்ஸ்பெக்டர் திரு.திருப்பதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சவுரிபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 27) கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது அழகி ஒருவர் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்த ரூ9500 பணம், ஒரு பைக் மற்றும் கருத்தடை தடுப்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.