தேனி: தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திரு.பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மல்லிகா 42 என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சாவை விலைக்கு வாங்க வந்த ஜிபின் 30. அன்சில் 30. ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.