திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் சேர்ந்தவர் பாருக் இவர் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் பாருக்கின் மனைவி அத்தர் பேகம் தனது பிள்ளைகளுடன் மகள் பாத்திமா வீட்டில் தங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் தந்தை இறந்த வீட்டில் தினமும் காலை வந்துள்ளனர் வழக்கம் போல் சாதிக் விளக்கேற்ற வந்த போது வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு அறைகளில் இருந்த பீரோக்களை உடைத்து அதிலிருந்த 22 சவரன் தங்க நகை வெள்ளி கொலுசுகள் மற்றும் 3.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து சாதிக் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்