சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசிப்பவர் செளந்தரராஜன் இவர் நீதிமன்ற அலுவலகம் அருகே பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார்,
இன்னிலையில் செளந்தரராஜன் தனது குடும்பத்துடன் கடந்த 19ம் தேதி திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இன்று வீடு திரும்பியுள்ளார்,
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ மற்றும் டேபிள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 9 பவுன் தங்க நகை, 25 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரிய வந்தது,
இதனையடுத்து செளந்தரராஜன் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்த போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்,















