திருநெல்வேலி: சீதபற்பநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லவன் கோட்டையைச் சேர்ந்த பெருமாள்(35), என்பவர் கூலி வேலை செய்து வருகிறார்.
23.10.2021அன்று காலை பெருமாள் தனது தோட்டத்தில் உள்ள பூக்களை பறித்து விட்டு பூக்களை விற்பனைக்காக திருநெல்வேலி டவுண் பூ மார்க்கெட்டில் கொடுத்துவிட்டு திரும்பி வந்து பார்க்கும் போது .
வீட்டின் கதவு வெளிப்புறமாக உடைக்கப்பட்டு வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2 இலட்சத்து 73 மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து பெருமாள் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடியது அதே பகுதியைச் சேர்ந்த பிச்சையா என்பவரின் மகன் ராஜரத்தினம் என்பது தெரியவந்தது.
மேற்படி குற்றவாளி ராஜரத்தினத்தை உதவி ஆய்வாளர் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் குற்றவாளியிடமிருந்து 2 இலட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.