திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா,IPS உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம் குறித்தும், பொது ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிக்கும் படியும், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.
பொதுமக்கள் அத்தியாவசியத் தேவை இன்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்லும் படியும், அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா