கோவை: கோவை பொன்னைய ராஜ புரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், இவரது மகன் மாரிமுத்த 24 மளிகை கடை நடத்தி வருகிறார் .நேற்று கடையில் இவரும் தம்பியும் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர், அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 பேர் காய்கறி வாங்கினார்கள். வாங்கிவிட்டு பணத்தை கொடுக்கவில்லை. பணத்தை மாரிமுத்து கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 2பேரும் அங்கிருந்த பிளாஸ்டிக் டிரேயை எடுத்து மாரிமுத்துவின் தலையில் தாக்கி கொல்ல முயற்சித்தனர்.
இதில் மாரிமுத்து தலையிலும் கண்ணிலும் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அதை பகுதியை சேர்ந்த மணி என்ற மணிகண்டன் விக்கி என்ற விக்னேஸ்வரன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
இவர்கள் இருவர் மீதும் கொலை முயற்சி| தாக்குதல் உட்பட 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது