திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 327 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
ஆங்காங்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறக்கூடாது எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி வரை காய்கறி மற்றும் மளிகை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
இன்று காலையில் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களின் 217பேரின் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். முகக்கவசம் அணியாதவர்கள் 398 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S. ராகுல்