மதுரை : வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகன் கண்ணபிரான் (35). அதே பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் மகன் முஹம்மது இஷாத், அப்பாஸ் மகன் முகமது ரியாஸ். இவர்கள் இருவரும் கண்ணபிரான் வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். இதை அவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கண்ணபிரானை ஆபாசமாக பேசி தாக்கினர். இந்த சம்பவம் குறித்து கண்ணபிரான் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய முகமது இஷாத், முகமது ரியாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி