திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே மேல்கிளாவரை கிராமத்தை சேர்ந்த சிவராமன் மகன் முரளிதரன் (வயது 23). இவர் கடந்த 22-ந்தேதி காலை தனது வீட்டின் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார், முரளிதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் முரளிதரனின் நண்பர்களான அதே ஊரை சேர்ந்த ரங்கராஜன் (27), பாலசுப்பிரமணி என்ற அமுல் (25) ஆகியோரை இன்று போலீசார் கைது செய்து, அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்