திருவண்ணாமலை: வந்தவாசி அருகே பொன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(23) டிரைவர். இவருக்கு திருமணமாகி 1½ வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் விஜயகுமாருக்கும் பொன்னுரை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தினால் சிறுமி 5 மாதம் கர்ப்பமானார் பாதிப்படைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் சிறுமியின் பெற்றோர் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்