ஈரோடு: ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அடுத்த மேற்கூர் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் 26. இவர் கோபி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமி தற்போது 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரை சிறையில் அடைத்தனர்.