மதுரை: செல்லூர் அருள்தாஸ் புரம் மெயின் ரோடு பெரியசாமி நகரை சேர்ந்தவர் திருத்தணி முருகன் மகன் அரவிந்த் (22). இவரது தாய் தந்தை இறந்த நிலையில் பாட்டியுடன் வசித்து வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த வாலிபர் அரவிந்த் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து அவருடைய பாட்டி சுப்புலட்சுமி (65) செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் அரவிந்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி