கரூர்: கரூர் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் 25. கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செந்தில்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.