கன்னியாகுமரி: குளச்சல் காவல் நிலைய எஸ்.ஐ.சணல்குமார் இன்று பாலபள்ளம் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்த போது அவர் சேவிளை பகுதியை சேர்ந்த ரமேஷ்(35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை சோதனை செய்த போது அவர் சட்டவிரோதமாக அந்த பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்ய வைத்திருந்ததை கண்டுபிடித்தார். பின்பு அவரிடமிருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
கஞ்சா, குட்கா, போதை பொருட்களுக்கு விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.