செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கொலை கொள்ளை மற்றும் வழிபறி வழக்குகளில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டை சேர்ந்த கோபி என்கிற கோபிநாத் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.அ.பிரதீப் இ.கா.ப. அவர்கள் பரிந்துரைத்ததின் பெயரில் மாவட்ட ஆட்சியர் திரு. A.R.ராகுல்நாத் இ. ஆ. ப. அவர்கள் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் திரு. வடிவேல் முருகன் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவலில் புழல் சிறையில் அடைத்தார்.