கோவை: கூடலூரை சேர்ந்த மகாபிரபு (23) .இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை அத்திப்பாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் மகா பிரபுவின் கையிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். மகாபிரபு அருகில் உள்ளவர்கள் உதவியுடன் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை துரத்திப் பிடித்த பின்னர் அவர்களை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் செல்போனை பறித்து சென்ற வாலிபர் கணபதி கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (21) மற்றும் கணபதி தோட்டம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் விஜய் (22) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்