இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பே. சிபின், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பயிற்சியில் காவல்துறையினரின் ஒழுக்கம், அணிவகுப்பு திறன் மற்றும் தயார்நிலை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. மேலும், துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கனகராஜ் (இராணிப்பேட்டை உட்கோட்டம்), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.




















