சேலம்: சேலம் மாவட்டம் மாவட்டம் காவிரிபட்டி வாய்க்காலில் இன்று அதிகாலை வாய்க்காலில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தேவூர் காவல்துறையினர் கல்வடங்கம் செல்லும் முக்கிய சாலையோரமாக உள்ள ஓக்கிலிபட்டி கன்னி வாய்க்காலில் இரண்டு அடி தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு விசாரித்ததில் கோனேரிப்பட்டி, அக்கரகாரம்,
பூமணியூரைச் சேர்ந்த தங்கவேல் 50 என்பது தெரியவந்ததை தொடர்ந்து பிரேதத்தை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தேவூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.















