திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளாதேவி அவர்கள், (30.03.2026) நடைபெற உள்ள வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலருடன் ஆலோசித்து, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வருகை, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக பரிசீலிக்கப்பட்டது.
மேலும், வேட்பு மனு தாக்கல் நிகழ்வை முன்னிட்டு தேவையான காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்த ஆய்வில் துணை காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி மற்றும் காவல் ஆய்வாளர் ஆனந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



















