திருப்பத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு, (30.03.2026) திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டை மற்றும் அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவாரங்குப்பம், கவுகாப்பட்டு, திகுவபாளையம் மற்றும் திம்மாம்பேட்டை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பரிசீலித்து, தேவையான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.




















