திருப்பத்தூர் : 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவமற்றபள்ளி மற்றும் குனிச்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்கள் (10.04.2026) நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை ஆகியவை குறித்து விரிவாக பரிசோதிக்கப்பட்டது. மேலும், தேர்தல் அமைதியாகவும் சீராகவும் நடைபெற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கை, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.




















