சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சத்யாநகரைச் சேர்ந்த நகைவியாபாரி பாலசுப்பிரமணியன் என்பவர் 15.07.2020 அன்று இருசக்கர வாகனத்தில் பள்ளத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சத்தியமூர்த்தியை வழிமறித்து 7 பவுன் தங்கநகை, இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்களை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து சத்தியமூர்த்தி அளித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அருண் அவர்களின் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து 29.07.2020 அன்று வழிப்பறியில் ஈடுபட்ட முருகன் மற்றும் செந்தில் ஆகிய 2 நபர்ளை u/s.395 IPC – ன் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 7 பவுன் தங்க நகை, இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை