ஈரோடு: பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் ஹோட்டல் நடத்தி வருபவர் சுப்புராமன்(55).இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு ஓட்டல் முன்பு நண்பர் செந்தில் என்பவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2,500 பணத்தை பறித்துள்ளனர்.
இதையடுத்து சுப்புராமன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.பின்னர் பணம் பறித்த நபரை பிடித்தனர்.அப்போது காரில் இருந்த மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.இதையடுத்து அந்த நபரை அவர்கள் பெருந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், கண்டிச்சேரியைச் சேர்ந்த, அஸ்ரப் மகன் அன்சப் (26) என்பதும், இவர் மீது, கேரளா மாநில பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அன்சப்பை கைது செய்தனர். தப்பி ஓடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்