தருமபுரி: தருமபுரி மாவட்டம் அளே தருமபுரி பகுதியை சேர்ந்த வேலு என்பவர் பார்சல் சர்வீஸ் வாகனத்தை இயக்கி வருகிறார். இவர் சேலம் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த போது.
சிறுநீர் கழிக்க தடங்கம் அருகில் சர்வீஸ் ரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்ற போது மர்ம நபர்கள் இவரை மிரட்டி ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பத்தாயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் வேலு என்பவர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.ரங்கசாமி அவர்கள் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழிபறியில் ஈடுபட்ட சக்தி குமார் 18, ஜெயசூர்யா 24, சையத் மன்சூர் 18 ஆகிய மூவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.