பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் வசிக்கும் மஞ்சுளா என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபர்களிடம் பணம் கொடுக்காததால் மஞ்சுளாவின் கணவரான கமலகாசன் என்பவரை கொலை செய்த நபர்கள் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 882/22 U/s. 302 IPC ன் படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் மேற்படி வழக்கின் குற்றவாளிகளான மனோஜ்குமார் (24/23), கார்த்திக் (27/23), இருவரும் காலனி தெரு, பெரம்பலூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் திருமதி.கற்பகம் இ.ஆ.ப அவர்கள் (14.03.2023) தேதி மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேற்படி குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் காவல் ஆய்வாளர் திரு.முருகேசன் மற்றும் தலைமை காவலர் திருமதி.1864 திருமதி.செல்வராணி ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் வெகுவாக பாராட்டினார்.