திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, அனைத்து உட்கோட்ட பகுதிகளிலும் ஆயுதப்படை காவலர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று (05.07.2020) 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வரும் காவலர்களின் நலன் கருதி வள்ளியூர் உட்கோட்ட அனைத்து காவல் நிலையத்திலும் மற்றும், காவலர் குடியிருப்பு பகுதியில், பேருந்து நிலையத்தில், பிரதான சாலையில், முக்கிய வீதிகளில், சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருக்கும் பேரி கார்டில், வாகனத்தில், ஆயுதப்படை காவலர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி