இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் (25.04.2023) ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் ஊராட்சி அனுசியாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.92 இலட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், எட்டிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை வருகை பதிவேடு, சமையலறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டதுடன் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வாசிப்பு திறனை அறிந்து கொள்ளும் வகையில் மாணவ, மாணவிகளை புத்தகம் வாசிக்க சொல்லி
கலந்துரையாடினார்.
தொடர்ந்து, தொடக்கப்பள்ளி வளாகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.76
இலட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், தென்னவனூர், முதல் வீரவனூர் இணைப்பு சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.56 இலட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், சத்திரக்குடி கிராமத்தில், 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், தீயனூர், சமத்துவப்புரத்தில் பழுதடைந்த வீடுகளை பழுது நீக்கம் செய்யும் திட்டத்தின் கீழ் ரூ.45.74 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகளில் பழுது நீக்கம் செய்யும்பணிகள் நடைபெற்று வருவதையும், போகலூர் ஊராட்சியில் 15 வது நிதிக்குழு சுகாதாரத் தலைப்பு திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து, போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப
சுகாதார நிலையத்தில் அங்கு வருகை புரியும் பணியாளர்கள், மருத்துவர்கள் குறித்து
கேட்டறிந்தத்துடன் மருத்துவ பரிசோதனைக்கு வருகை புரிந்த கர்ப்பிணி தாய்மார்களிடம்
மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் தொடர்பாகவும், வழங்கப்படும் பரிசோதனை முறைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.முன்னதாக, இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் முதல் இதம்பாடல் வரை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் இடைவெளி தடத்திலிருந்து இரு வழி சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் திரு.சந்திரன் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள், திரு.சிவசாமி அவர்கள், பரமக்குடி வட்டாட்சியர் திரு.ரவி அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.