தேனி : தேனி மாவட்டம், கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் இவர் (17) வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். அவருக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.மங்கையர் திலகம், விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.