திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாதன் நாராயணசாமி அரசு தன்னாட்சி கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் தொல்லியல் மரபு மன்றம் நடத்தும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. பொன்னேரி பகுதியில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாப்பது குறித்தும் அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தொல்லியல் மரபுத்துறை மன்ற இணை பேராசிரியர் மற்றும் துணைத் தலைவர் ஒருங்கிணைப்பாளர் மாறவர்மன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியின் முதல்வர் முனைவர் மாசா தில்லைநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் இணை பேராசிரியர் சு ஜகஜீவன் ராம் மற்றும் கோ.கோ.ஏசுபாதம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தனர். தமிழ்நாட்டின் தொல்லியல் சுவடுகள் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியின் வரலாற்று துறை இணை பேராசிரியர் முனைவர்.வெங்கடேஷ்வரன் பொன்னேரி பகுதியில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாப்பது குறித்தும் அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாட்டின் அண்மைகால அகழ்வு ஆய்வுகள் என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் ரா.காவியா சிறப்புரையாற்றினார்.
உ.நா.கல்லூரி உதவிப் பேராசிரியர் ஜேசுதாஸ் ஆரோக்கியம் வாழ்த்துரை வழங்கினார். முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாற்று துறை மாணவி திரிஷா நன்றி கூறினார். கருத்தரங்குக்கு பின்பு பேசிய வரலாற்று துறை மாணவிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் அருகில் உள்ள ஆற்றம்பாக்கம் கிராமத்தில் ஆதி தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்க பெற்றதை அறிந்து கொள்ள முடிந்தது எனவும் கீழடி ஆராய்ச்சியில் வெளிப்பட்ட பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த வரலாற்று சுவடுகளை ஆய்வாளர்கள் நன்றாக விளக்கினர் எனவும் தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















