கோவை : கோவை பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட சின்னியம்பாளையம் பகுதியில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணி செய்து கொண்டுள்ளனர் சமூக வலைதளர்களில் பரவக்கூடிய செய்திகளை பார்த்து அவர்கள் இன்று சொந்த ஊருக்கு புறப்பட்டு விட்டனர் உடனடியாக பீளமேடு காவல் ஆய்வாளர் திரு.கணேஷ் குமார் , அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆய்வாளர் பாதிக்கப்பட்ட இடத்துக்கு விரைந்து வந்து வடமாநில தொழிலாளர்கள் இடம் பேசி சமூக வலைதளங்களில் வரக்கூடிய செய்திகள் அனைத்தும் போலியானது இதை நம்ப வேண்டாம் உங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் காவல்துறை கண்டிப்பாக உதவி செய்யும் என்று அவர்களுக்கு ஊக்கமான ஒரு செய்தியை கூறிய பிறகு அவர்கள் பணியை தொடங்கினர் பின்பு காவல் ஆய்வாளர் உங்களுக்கு தொந்தரவு இருந்தால் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறினார்.இதில் உதவி ஆய்வாளர் திரு.முருகேசன், தலைமை காவலர் திரு.பெருமாள், உடன் இருந்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்