கோவை: வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் மொபைல் எண்ணிற்கு அவர்களது வங்கியிலிருந்து அனுப்பப்படுவது போல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் அவர்களது வங்கிக் கணக்குடன் பான் கார்டு விவரங்கள் இணைக்க வேண்டி இருப்பதால்,
இந்த லிங்கில் சென்று ஆன்லைனில் அப்டேட் செய்யவும் என்று குறிப்பிட்டு, அதில் ஒரு URL LINK உள்ளது. அந்த குறுஞ்செய்தியை பார்ப்பவர்கள் அதனை வங்கியில் இருந்து அனுப்பப்பட்டது என்று நினைத்து, அந்த லிங்கில் உள்நுழையும் போது,
அந்த வங்கியின் வெப்சைட் போல் உருவாக்கப்பட்ட மோசடியான PHISHING WEBSITE திறக்கிறது. அது பார்ப்பதற்கு வங்கியின் பெயரில் வங்கியில் இதைப் போன்றே காணப்படும் அதில் அவர்களின் வங்கி கணக்கு எண் ATM CARD NUMBER, OTP போன்ற விவரங்கள் பூர்த்தி செய்யுமாறு கூறப்படுகிறது.
அதனை வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்தவுடன் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி எடுக்கப்படுகிறது எந்த வங்கியும் தனது வாடிக்கையாளர்களுக்கு PAN Card Link செய்யவும் அல்லது KYC Update அப்டேட் செய்யவும் மெசேஜ் மூலமாக எதுவும் அனுப்புவதில்லை.
இதனை அறியாத வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி நடந்து வருகிறது. எனவே வங்கி கணக்கு வைத்திருக்கும் பொதுமக்கள் இந்த மோசடி மெசேஜ்களை நம்பி ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறு காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.