விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 22.11.2021. விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒருவர் தான் முன்னணி நிதி நிறுவனத்திலிருந்து வருவதாகவும் உடனடியாக லோன் வழங்கப்படும் என்று கூறி முன்பணம் பெற்று ஏமாற்றியதாக கணினி வழி குற்றபிரிவு காவல் நிலையத்திற்கு வந்த புகாரை தொடர்ந்து.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர். இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி மாவட்ட கணினி வழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆ.மணிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆய்வாளர். திருமதி.உமா மகேஸ்வரி அவர்களின் தலைமையில் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் முன்னணி நிறுவனத்தின் பேரில் பணமோசடி செய்த திருநெல்வேலியை சேர்ந்த நபரை வழக்கு பதிவு செய்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து மோசடி செய்த தொகை 1,90,000/- மற்றும் செல்போனை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.