பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் (01.04.2023), -ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிள்ளாங்குளம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை ஊரல்போட்டு விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ரஞ்சனா, உதவி ஆய்வாளர் திருமதி.செந்தமிழ் செல்வி மற்றும் அவரது குழுவினர்கள் பிள்ளாங்குளம் கிராமத்தில் சோதனையிட்ட போது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் , பிள்ளாங்குளம் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் பெருமாள் @ கொளஞ்சி (56), என்பவர் பிள்ளாங்குளம் காட்டுக்கொட்டகை அருகே சுமார் 70 லிட்டர் நாட்டு சாராயத்தை லாரி டியூப்கள் மற்றும் பாக்கெட்டுகளில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்தும் நாட்டு சாராயத்தை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி அழித்தும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனை செய்த மேற்படி நபரை கைது செய்தும் விற்பனைக்காக பயன்படுத்திய TN 77 X 7963 என்ற இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும் மேற்படி குற்றவாளியை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ரஞ்சனா அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட காவல் அலுவலக தொலைப்பேசி எண் 9498100690 என்ற தொலைப்பேசியினை தொடர்பு கொள்ளலாம். இரகசியம் காக்கப்படும்.