கடலூர்: கடலூர் மாவட்டம் புதிய காவல் கண்காணிப்பாளர் திரு. சக்திகணேசன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சக்திகணேசன் உத்தரவின் பேரில் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் ஆய்வாளர் திரு. விஜயரங்கன், உதவி ஆய்வாளர்கள் திரு. ஜம்புலிங்கம், கணேசன், தனிப்பிரிவு தலைமை காவலர் திரு. பாலமுருகன் உள்ளிட்டோர் விருத்தாசலம் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த முருகன்குடியைச் சேர்ந்த தங்கவேல் மகன் திருஞானம், விருத்தாசலம் புதுப்பேட்டை தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சண்முகம், ராமச்சந்திரன்பேட்டை துரைசாமி மகன் முருகேசன் ஆகியோர் விருத்தாசலம் காந்திநகரில் சந்தேகப்படும் படியில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட “லாட்டரி ” சீட்டுகள் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர் மூவர் மீதும் வழக்கு பதிவு கைது செய்தனர்.
மேலும் விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையைச் சேர்ந்த சன்னியாசி மகன் சிவபாலன் அரசு தடை செய்யப்பட்ட “ஹான்ஸ்”விற்பனை செய்துள்ளார் ஹான்ஸ் பொட்டலங்களை கைப்பற்றினர் மேலும் தொரவலூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் செந்தில்ராஜ் என்பவரிடம் 20 மது பாட்டில்களை காவல்துறையினர் கைப்பற்றி கைது செய்தனர்.