திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு, S. அரவிந்த் அவர்கள் அளித்த ரகசிய தகவலின் படி, போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு, M,அறிவழகன் அவர்களின் தலைமையில், போளூர் காவல் ஆய்வாளர் திரு, S.கோவிந்தசாமி மற்றும் அதிவிரைவுப் படை காவலர்கள், இணைந்து நடத்திய சோதனையில், போளூர் பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ள கடையில், அசாம் மாநிலத்தைச் சார்ந்த லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த, சுபாஷ் (34), வைகுந்த் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடமிருந்து 4,847 லாட்டரி சீட்டுக்களையும் (மொத்த மதிப்பீடு சுமார் = 5,34,790/- ரூபாய்) மற்றும் மூன்று எதிரிகளிடமிருந்து ரொக்கமாக 7,040/- ரூபாயும் கைப்பற்றப்பட்டது,
மேலும் இவர்கள் மீது போளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்